Categories
தேசிய செய்திகள்

பிச்சையில் ஓர் புரட்சி…! “நாட்டின் முதல் டிஜிட்டல் பிச்சைக்காரர்”…. போன் பே மூலம் பிச்சை…!!!!

பிச்சை எடுக்கும் நபர் ஒருவர் கூகுள் பே மற்றும் போன் பே மூலம் பிச்சை கேட்கும் சம்பவம் நெட்டிசன்கள் இடையே விவாதத்தை கிளப்பியுள்ளது.

பீகார் மாநிலம் மேற்கு சம்பரான் மாவட்டத்தில் உள்ள பெட்டியா நகரில் ராஜூ என்ற நபர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள பெட்டையா ரயில்நிலையத்தில் கூகுள் பே மற்றும் போன் பே மூலம் பிச்சை எடுத்து வந்துள்ளார். தற்போதைய காலத்தில் அனைத்தும் டிஜிட்டல் மயமாகி வரும் நிலையில்,அவர் தான் பிச்சை கேட்கும் முறையையும் மாற்றி டிஜிட்டல் மயமாக்கியுள்ளார்.

அதாவது கழுத்தில் QR  Code-ஐ   தொங்கவிட்டு கையில்  ஒரு டேப் (Tab)  வைத்துக் கொண்டு பிச்சை கேட்கிறார். இவரிடம் யாரேனும் சில்லறை இல்லை என்று கூறினால் அவர்களிடம் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துமாறு கேட்பாராம்.

இதில் இருந்துதான் அவருக்கு இந்த யோசனை வந்துள்ளது. இவரே நாட்டின் முதல் டிஜிட்டல் பிச்சைக்காரர் எனவும் இவரின் இந்த அறிவுபூர்வமான செயலை பலர் பாராட்டி வருகின்றனர். ஆனால் பலரும் பிச்சை எடுப்பதை ஊக்குவிக்கக் கூடாது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தன்னுடைய அன்றாட செலவுகளுக்கு இது போதும் என்று கூறும் ராஜூவின்  வருமானம்  இதன்மூலம் அதிகரித்துள்ளது.

Categories

Tech |