Categories
சினிமா தமிழ் சினிமா

“ஷில்பா ஷெட்டிக்கு” விவாகரத்தா…? நடவடிக்கை எல்லாம் காட்டிக் கொடுத்துட்டு…. கருத்து தெரிவித்த நெட்டிசன்கள்….!!

தமிழ் திரையுலகில் விஜயுடன் குஷி படத்தில் நடித்த ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ரா ஜோடி விரைவில் விவாகரத்து செய்வதற்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலிவுட்டின் பிரபல நடிகையான ஷில்பா ஷெட்டி தொழிலதிபரான ராஜ்குந்த்ராவை கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். இவர் தமிழில் குஷி படத்தில் விஜயுடன் நடித்துள்ளார். இதனையடுத்து ஷில்பா ஷெட்டியின் கணவரான ராஜ்குமாரை காவல்துறை அதிகாரிகள் ஆபாச படம் எடுத்த குற்றத்திற்காக கைது செய்துள்ளார்கள். அதன்பின்பு ஜாமினில் வெளிவந்த ராஜ்குந்த்ராவிற்கும் ஷில்பா ஷெட்டிக்குமிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் சமூகவலைதளத்தில் இருவரும் விவாகரத்து செய்ய போகிறார்கள் என்று தகவல் பரவியுள்ளது. ஆனால் இதனை ஷில்பா மறுத்துக் கொண்டே வந்துள்ளார். இவ்வாறு இருக்க ராஜ் குந்த்ரா தனக்கு சொந்தமான சொத்துக்களை சரிபாதியாக பிரித்து அவருக்கு கொடுத்துள்ளார். இதனை மையமாக வைத்து இருவருக்குமிடையே விவாகரத்து கூடிய விரைவில் ஆவதற்கு வாய்ப்புள்ளதாக நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

Categories

Tech |