சுவிட்சர்லாந்தின் மந்திரி ஒருவர் தனக்கு வந்த நன்றி கடிதத்தை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ஸ்விட்சர்லாந்திலுள்ள Bern பகுதியில் பெண்கள் இருவர் நடந்து சென்றுள்ளார்கள். அப்போது அங்கு வந்த மினி கூப்பர் கார் ஒன்றை இருவரும் நிறுத்தி லிப்ட் கேட்டுள்ளார்கள். இதனால் அந்த காரும் அவர்களை ஏற்றிக் கொள்வதற்காக நின்றுள்ளது. இதனையடுத்து காரினுள் சென்ற அந்த இரு பெண்களும் உள்ளே இருந்தவரை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.
ஏனெனில் அந்தக் காரினுள் சுவிட்சர்லாந்தின் அமைச்சரவை உறுப்பினர்களுள் ஒருவரான சிமோனெட்டா இருந்துள்ளார். இதனையடுத்து இரு பெண்களும் சொன்ன இடத்தில் சிமோனெட்டா அவர்களை இறக்கி விட்டுள்ளார். இந்நிலையில் இரு பெண்களும் தனக்கு உதவி செய்த சிமோனெட்டாவிற்கு நன்றி கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்கள். இதனை புகைப்படம் எடுத்த சிமோனெட்டா தனது இன்ஸ்டாகிராமில் அதனை பதிவேற்றியுள்ளார்.