மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று வெற்றிக்கனியை எட்டிப் பிடிக்கும் நாளாக இருக்கும். விடிய காலையிலேயே நல்ல தகவல்கள் வந்து சேரலாம். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். இன்று அரசியலில் உள்ளவர்கள் வாகனங்களை பயன்படுத்தும் பொழுது ரொம்ப கவனமாக பயன்படுத்துங்கள். சிலருக்கு இடமாற்றம் போன்றவை ஏற்படக்கூடும்.
நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வாழ்க்கை தரமும் உயரும். காரியத்தில் வெற்றியும் ஏற்படும். கடன் பிரச்சினைகள் அனைத்தும் சரியாகும். கொடுக்கல்வாங்கல் விஷயங்கள் கூட சிறப்பாகவே இருக்கும். இன்று பழைய பாக்கிகள் வசூலாகி மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். காதல் வயப்பட்டவர்களுக்கு இன்றைய நாள் ரொம்ப சிறப்பாக இருக்கும். திருமணத்தில் முடியும்.
இன்று மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். ஆதாயமும் நல்லபடியாக கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் ஆசிரியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் நிலையில் இருக்கும் அது மட்டும் இல்லை இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துமே சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் பச்சை நிறம்