பாம்பு கடித்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள முன்சிறை அள்ளம் பகுதியில் பழனி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அழகம்மாள் என்ற மனைவியை இழந்துள்ளார். இந்த மூதாட்டி தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் புளிய மரத்தில் இருந்து விழுந்த புளியங்காய்களை ஒரு பாத்திரத்தில் சேகரித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த பாம்பு மூதாட்டியைக் கடித்துள்ளது.
இதனால் மயங்கி விழுந்த மூதாட்டியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மூதாட்டி பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.