புஷ்பா படத்தில் இடம்பெற்ற ‘ஸ்ரீவள்ளி’ என்ற பாடலை பிரபல பாடகி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பாடியது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
அல்லு அர்ஜுன் நடிப்பில் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் சென்ற டிசம்பர் மாதத்தில் வெளிவந்த திரைப்படம் “புஷ்பா”. இது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளிவந்தது. இத்திரைப்படம் பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா, சுனில், அஜய் கோஸ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளிவந்தது. மேலும் இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் செம ஹிட் கொடுத்தது.
அந்த வகையில் இப்படத்தில் இடம்பெற்ற “ஸ்ரீ வள்ளி” என்ற பாடலை பிரபல பாடகி ‘எம்மா ஹீஸ்டர்ஸ்’ என்பவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து பாடியிருக்கிறார். அவர் பாடிய இப்பாடலை புஷ்பா படத்தின் இசையமைப்பாளரான தேவி ஸ்ரீ பிரசாத் தனது இணையதளபக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்த்தது. தற்பொழுது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.