தமிழ்நாட்டில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு “எண்ணும் எழுத்தும்” என்ற திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குவதற்கு மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் 12 கட்டங்கள் கொண்ட புத்தகத்தை தயார் செய்துள்ளது.
இந்த எண்ணும் எழுத்தும் பயிற்சிகள் பிப்ரவரி 9-ஆம் தேதி முதல் மார்ச் 25-ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 1 லட்சத்து 8 ஆயிரத்து 275 ஆசிரியர்கள் எண்ணும் எழுத்தும் பயிற்சி பெற உள்ளனர்.