Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பில் இப்படி ஒரு மாற்றமா?…. பள்ளிக்கல்வித்துறை போட்ட அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் கொரோனா 3-வது அலை காரணமாக கடந்த மாதம் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதால் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் பல தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் வகுப்புகள் சில மணி நேரங்கள் மட்டுமே நடைபெறுவதாக புகார்கள் எழுந்துள்ளது.

இதனால் பள்ளிக்கல்வித்துறை அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு பாடங்களை தடையின்றி நடத்த வேண்டும் என்றும், காலை, பிற்பகல் என முழு நேரமும் பள்ளிகள் செயல்பட வேண்டும் என்றும் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும் இதுகுறித்து அனைத்து மாவட்ட பள்ளிகளுக்கும் சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது.

அதில், பள்ளிகள் முழுநேரமும் இயங்க வேண்டும் என்றும், மாணவர்களுக்கு குறிப்பிட்ட நாட்களுக்குள் பாடத்தை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் பள்ளிக்கல்வித் துறையின் இந்த உத்தரவை மீறி சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெற்றால் அந்த பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |