சீனாவிலிருந்து தோன்றிய மாபெருந்தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு சுமார் 11/2 மணி நேரமாக அமெரிக்காவிலுள்ள நேஷனல் கதீட்ரல் தேவாலயத்தில் மணி ஒலி எழுப்பி மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவிலுள்ள நேஷனல் கதீட்ரல் தேவாலயத்தில் கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களுக்கு 1,00,000 நூறு முறை என்ற கணக்கில் மணி ஒலி எழுப்பி மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி தற்போது அமெரிக்காவில் 9 லட்சத்துக்கும் மேலான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் சுமார் 11/2மணி நேரமாக நேஷனல் கதீட்ரல் தேவாலயத்தில் இந்த நிகழ்ச்சி நடந்துள்ளது. அதன்படி அந்த தேவாலயத்தில் 900 முறை மணி ஒலி எழுப்பி கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.