ஒடிசாவில் வணிக வளாக பெண் ஊழியர்கள் பெண் செய்தியாளர் மற்றும் புகைப்பட கலைஞரை தாக்கினர். இதனையடுத்து காவலர்கள் பெண் ஊழியர்கள் இருவரையும் கைது செய்தனர்.
ஒடிசாவில் அமைந்துள்ளது பிரபலமான வணிக வளாகம். இந்த வளாகத்தில் பெண் செய்தியாளர் ஸ்வாதி ஜெனா புகைப்பட கலைஞருடன் செய்தி சேகரிக்கச் சென்றார். அப்போது வாகன நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட தகராறில் பெண் ஊழியர்கள் இரண்டு பேரும் பெண் செய்தியாளர் ஸ்வாதி ஜெனாவை தாக்கினார்கள் என்று கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த ஜெனா, வணிக வளாகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் இதுதொடர்பாக ஜெனா, ஷகித் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவலர்கள் இரண்டு பெண் ஊழியர்களையும் கைதுசெய்தனர். அவர்களிடம் இது பற்றி காவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.