ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டதிலிருந்து தற்போது வரை சுமார் 5 லட்சம் மக்கள் பலியாகியிருப்பதாக உலக சுகாதார மையம் கூறியிருக்கிறது.
தென்னாப்பிரிக்காவில் கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டது. அப்போதிருந்து, தற்போதுவரை சுமார் 13 கோடி மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்டா தொற்றை விட ஒமிக்ரான் வைரஸ் வீரியம் குறைவாக இருக்கிறது.
மேலும், ஒமிக்ரான் தொற்றை கட்டுப்படுத்தக் கூடிய திறன் தடுப்பூசிக்கு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 5 லட்சம் மக்கள் ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டு பலியாகியுள்ளது சோகத்திற்கு அப்பாற்பட்டதாக உள்ளது என்று உலக சுகாதார மையம் கூறியுள்ளது.
மேலும், ஒமிக்ரான் தொற்று நடுப்பகுதியில் உள்ளது என்றும் இறுதிகட்டத்தை நெருங்குவதற்கு அதிக பாதிப்புகள் உண்டாகலாம் என்றும் உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.