கேரளா முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் ஞாயிறு முழு ஊரடங்கு விலக்கிக்கொள்ளப்படுவதாக முடிவெடுக்கப்பட்டது
நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று குறைந்து வரும் நிலையில், கேரளாவிலும் குறைந்து வருகிறது. இது தொடர்பாக கேரள முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் கேரள அரசின் உயர்மட்ட கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமையில் பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கு விலக்கி கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிப்ரவரி 28ஆம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் முழுமையாக செயல்படும் எனவும் அதுவரையில் 50 சதவீதம் மாணவர்களுடன் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து ஆலுவா சிவராத்திரி, மாரமன் மாநாடு, புகழ்பெற்ற ஆற்றின்கல் பொங்கல் விழாவை நடத்துவதை குறித்தும் விவாதிக்கப்பட்டது.