வயலில் இருந்த பாம்பை வனத்துறையினர் பத்திரமாக பிடித்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தகட்டூர் ராமகோவிந்தன் காட்டில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது விவசாய வயலுக்கு வேலை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு 4 அடி நீளமுள்ள பாம்பு இருந்துள்ளது. அதனை கண்டு அதிர்ச்சியடைந்த மோகன் உடனடியாக கோடியக்கரை வனச்சரக அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறை ஊழியர் பாம்பை பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விட்டுள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.