சென்னை கேகே நகர்ப் பகுதியில் தம்பதியினர் ஒருவர் வசித்து வந்தனர். இந்த தம்பதியினருக்கு டேவிட் என்ற மூத்த மகன் இருக்கின்றார். இதில் கணவன்- மனைவி இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தாயை அவதூறாக பேசிய தந்தையை, மகனே செல்போன் சார்ஜரால் கழுத்தை நெரித்து படுகொலை செய்துள்ளார்.
இவ்வாறு தந்தையை கொலை செய்துவிட்டு மூன்று வருடங்களாகவே காசநோய்க்கு சிகிச்சை பெற்று வந்ததை பயன்படுத்தி, தந்தை காசநோயால் இறந்ததாக நாடகம் ஆடியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் பிரேத பரிசோதனையின் முடிவில் அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது காவல்துறையினருக்கு தெரியவந்தது. அதன்பின் காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் மூத்த மகன் டேவிட் தந்தையை ஆத்திரத்தில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.