காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் இரண்டு வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் ஆவதால் லாபம் கொடுக்கும் என்று தயாரிப்பாளர் எதிர்பார்க்கிறார்.
காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தை விக்னேஷ் சிவன் எழுதி இயக்குக்கிறார். இப்படத்தை ரௌடி பிக்ச்சர்ஸ் மற்றும் செவென் ஸ்க்ரீன் ஸ்டடூடியோஸ் தயாரித்துள்ளது. . இத்திரைப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி மற்றும் சமந்தா நடித்துள்ளனர். அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க, விஜய் கார்த்திக் கண்ணன் மற்றும் ஸ்ரீகர் பிரசாத் ஒளிப்பதிவு மற்றும் எடிட்டராக உள்ளனர்.
காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இதைத் தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இப்படத்தின் டீசர் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார். பிப்ரவரி மாதம் வரும் 17-ம் தேதி வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் திரைப்படத்துறையில் ஒரு படம் ஆரம்பிக்கப்பட்டு அதே வருடத்தில் முடித்தால் தயாரிப்பாளருக்கு லாபம் கிடைக்கும். ஆனால் இந்தப் படம் இரண்டு வருடங்களுக்கு பிறகு ரிலீசாகப் போகிறது. ஆனால் வழக்கமாக இதுபோன்ற படங்கள் தள்ளிப் போவதால் தயாரிப்பாளருக்கு நஷ்டத்தையே கொடுக்கும். ஆனால் இப்படத்தில் நடிக்கும் நயன்தாரா, விஜய் சேதுபதி, சமந்தா ஆகியோரின் மார்க்கெட் ரேட் தற்போது பலமடங்கு உயர்ந்துள்ளது. இதற்கு காரணம் இவர்கள் பாலிவுட்டிலும் களமிறங்கியுள்ளனர். மேலும் தற்போது அனிருத் இசைக்கு ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. இதனால் இப்படம் விக்னேஷ் சிவனுக்கு அதிக லாபத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.