தமிழகத்தில் வருகிற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலை முன்னிட்டு கட்சித் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தேர்தல் பரப்புரையாற்றினார்.
அதில் அவர் பேசியதாவது, தமிழகம் முழுவதும் பாஜகவிற்கு மிகப்பெரிய எழுச்சி உள்ளது 11 ஆண்டுகளுக்கு பிறகு தனித்து போட்டியிடுகிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மதத்தை வைத்து அரசியல் செய்யும் கட்சி பாஜக இல்லை வெற்றி தோல்வி என்பது பாஜகவிற்கு இரண்டாம் பட்சம் தான் பொய் பேசி ஆட்சியைப் பிடித்திருக்கிறது திமுக. தமிழகத்தை பொருத்தவரை காங்கிரஸ் ஐசியூவில் உள்ளது. திமுக எனும் ஆக்சிஜனை சுவாசித்து காங்கிரஸ் உயிர் வாழ்கிறது எனக் கூறியுள்ளார்.