கேரளாவில் 18 வருடங்கள் கழித்து ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் அதிரம்புழ என்னும் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் வசித்து வரும் சுரேஷ் பிரசன்னா குமாரி தம்பதியர்களுக்கு கடந்த 2005ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு கடந்த 18 வருடமாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தார்கள்.
இந்நிலையில் தற்போது பிரசன்னா குமாரி கர்ப்பமாகி உள்ளார். இந்த செய்தி குழந்தை இல்லாத அந்தத் தம்பதியருக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அன்று முதல் மருத்துவரின் ஆலோசனைப்படி மிகவும் பாதுகாப்பாகவும் குழந்தையை பராமரித்து வந்துள்ளனர்..
இந்நிலையில் இன்று காலை இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக கோட்டயத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு பரிசோதனையில் பெண்ணின் வயிற்றில் 4 குழந்தைகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. பின்னர் 4 குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் பத்திரமாக வெளியே எடுத்தனர்.