உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட 1 லட்சத்து 45 ஆயிரத்து 850 ரூபாய் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மம்சாபுரம் சாலையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மினி வாகனத்தை பறக்கும் படையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் உரிய ஆவணம் இன்றி 1 லட்சத்து 45 ஆயிரத்து 850 ரூபாய் பணத்தை மினி வாகனத்தில் கொண்டு வந்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து மம்சாபுரம் தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் ராஜபாளையத்தில் உள்ள ஆயில் சப்ளை செய்யும் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பணம் என்பது தெரியவந்துள்ளது.