கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் சீருடை தொடர்பான பிரச்சினையை கர்நாடக ஐகோர்ட்டின் விரிவான விசாரணை நடத்தப்படும் என தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புராவில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் மாணவிகள் சீருடை அணிந்து வரவேண்டும் என்று கல்வித்துறை நிர்வாகம் அறிவித்திருந்தது. அதனால் கல்லூரியில் பயின்று வரும் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் சீருடையின் மீது ஹிஜாப் அணிந்து வந்தனர். அதற்கு அந்த கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது. அந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்த இஸ்லாமிய மாணவிகள் பர்தா அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்த கல்லூரியை சேர்ந்த இந்து மதத்தை சேர்ந்த மாணவர்கள் காவி துண்டு அணிந்து கல்லுரிக்கு வந்தனர்.
இந்த சம்பவம் கர்நாடக மாநிலம் முழுவதும் பரவி சில பகுதிகளில் சண்டைகளும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மாநில அரசு கட்டாயம் சீருடை அணிந்து வர வேண்டும் என்று பள்ளி, கல்லூரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே உடுப்பியில் உள்ள அரசு கல்லூரி மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு கர்நாடக அரசு விதித்துள்ள ஆடை கட்டுப்பாடு குறித்து கர்நாடக ஐகோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகளான ரேஷ்மா பாரூக், காஜிரா மற்றும் அவரது தாய் உள்ளிட்டோர் தாக்கல் செய்தனர்.
இதனை தொடர்ந்து இந்த மனுக்கள் மீதான விசாரணை கர்நாடக ஐகோர்ட்டு தனி நீதிபதி கிருஷ்ணா எஸ் தீக்ஷித் முன்னணியில் இன்று நடைபெற்றது. அந்த விசாரணையில் கர்நாடக அரசின் சீருடை திட்டத்திற்கு இடைக்கால தடை போட முடியாது என நீதிபதி தெரிவித்தார். மேலும் ஹிஜாப் அணிந்து தொடர்பான பிரச்சனையே கர்நாடக ஐகோர்ட்டில் விசாரணை நடத்தப்படும் என தனி நீதிபதி உத்தரவிட்டார்.