பிளஸ்-2 மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கேதைஇருப்பூர் கிராமத்தில் மதன்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பிளஸ்-2 படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு மயிலாடுதுறையிலுள்ள தனது மாமா வீட்டிற்கு சென்று அவர் நடத்தி வந்த பர்னிச்சர் கடையில் தவணை முறையில் பொருட்களை வாங்கி சென்றவர்களிடம் பணம் வசூல் செய்யும் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு மதன்குமார் தனது தாயிடம் வேலை பிடிக்கவில்லை என்பதால் ஊருக்கு வருகிறேன் என்று போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். அதற்கு மதன்குமாரின் தாய் இன்னும் சில மாதங்கள் அங்கே இருந்து வேலை செய்யுமாறு கூறியுள்ளார். இதனால் மனவுளைச்சலில் இருந்த மதன்குமார் அவரது மாமா வீட்டில் யாருமில்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மதன்குமாரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து மதன்குமாரின் தந்தை காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.