Categories
அரசியல்

“ஸ்டாலினுக்கு செக்வைத்த அரசு ஊழியர்கள்…!!” நடக்கப்போவது என்ன…?

சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு அரசு ஊழியர்கள் பலர் ஆதரவாக இருந்தனர். ஏனெனில் அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்களுக்கும் மருத்துவர்களும் சில திட்டங்களுக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்தி வந்த போது திமுக .அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தது. அதோடு திமுக ஆட்சிக்கு வந்தால் திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும் எனவும் வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து 9 மாதங்கள் ஆன பின்பும் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. இதனால் திமுக மீது அரசு ஊழியர்கள் கடும் அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை தொடர்ந்து வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அரசு ஊழியர்களுக்கு தபால் ஓட்டுகள் வழங்கப்பட்டுள்ளன .

சில இடங்களில் தபால் ஓட்டுகளுக்கான விண்ணப்பத்தை கூட அரசு ஊழியர்கள் வாங்க முன்வரவில்லை. எனவும் இந்த தேர்தலில் வாக்களிக்க பெரும்பாலான அரசு ஊழியர்களுக்கு தேர்தலில் வாக்களிக்க விருப்பமில்லை எனவும் கூறப்படுகிறது. இதற்கெல்லாம் என்ன காரணம் என விசாரித்தபோது திமுக ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்களுக்கு புதிய பென்சன் திட்டத்தை ஒழித்து பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் எனவும் அரியர்ஸ், பெண்டிங் போன்றவற்றை சரி பார்த்து நிறைவேற்றுவோம் எனவும் தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு தற்போது அதை பற்றி எந்த பேச்சுவார்த்தையும் நடத்தாதது தான் அரசு ஊழியர்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. இந்நிலையில் அரசு ஊழியர்கள் கடந்த 7ஆம் தேதி முதல் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர்.

இது வரும் 10-ம் தேதி வரை தொடரும் என கூறப்படுகிறது. அதற்கு பின்னர் இரண்டு நாட்கள் அந்த அலுவலகத்திலேயே அவர்கள் போராட்டம் நடத்த இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு தபால் ஓட்டு போடுவது பற்றி அவர்கள் ஆலோசனை செய்ய உள்ளதாகவும் அரசு ஊழியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |