Categories
சினிமா

அடிச்சது லக்கு….! தெலுங்கில் அறிமுகமாகும் அதுல்யா ரவி…. அதுவும் யார் டைரக்டர் தெரியமா….?

தெலுங்கு திரையுலகில் அடியெடுத்து வைக்கிறார் நடிகை அதுல்யா ரவி.

அதுல்யா ரவி “காதல் கண் கட்டுதே” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் கதாநாயகியாக ஏமாளி, அடுத்த சாட்டை, நாடோடிகள் 2 என பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் கடைசியாக “முருங்கக்காய் சிப்ஸ்” திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். தற்போது இவர் எண்ணித்துணிக, வட்டம் மற்றும் காடவர் உள்ளிட்ட படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். இவர் தற்போது தெலுங்கு படத்தில் நடிக்க இருப்பதாகவும் அதற்காக தீவிரமாக தெலுங்கு கற்று வருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: “தெலுங்கு திரை உலகில் நுழைவதற்கு நல்ல கதைகளை கேட்டு வருகிறேன். புஷ்பா திரைப்பட தயாரிப்பாளரிடம் இருந்து ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே அவர்கள் என்னை தெலுங்கில் அறிமுகப்படுத்துவார்கள் என உணருகிறேன். இப்படம் ஒரு நகரம் சார்ந்த கதையாகும். ஒரு சில காட்சிகள் மற்றும் பாடல்களில் இடம்பெறும் கதாபாத்திரம் அல்ல. படம் முழுவதும் பயணிக்கின்ற கதாபாத்திரம்” என கூறியிருக்கிறார். எனக்கு தெலுங்கு தெரியாது என உண்மையை ஒப்புக் கொண்ட அதுல்யா ரவி, சென்ற ஒரு வருடமாக தெலுங்கு கற்று வருகிறார். அதுல்யா ரவி தற்போது ஐதராபாத்தில் படப்பிடிப்பில் இருக்கிறார். இவர் படப்பிடிப்பில் தெலுங்கில் பேசுவதாகவும், இப்படப்பிடிப்பு 10 நாட்களாக நடந்து வருவதாகவும் கூறி இருக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து நடிக்கயிருப்பதாக கூறியிருக்கிறார்.

Categories

Tech |