Categories
தேசிய செய்திகள்

கங்கையில் வீசப்பட்ட சடலங்களுக்கு…. அரசிடம் கணக்கு இல்லை…. அதிர்ச்சியூட்டும் தகவல்…!!!!

கொரோனா 3-ம் அலையின் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் கங்கையில் வீசப்பட்ட நிலையில் அதற்கு கணக்கு இல்லை என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில்  கூறியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், அதனால்  பலியானோர்  எண்ணிக்கையும் அதிகமானது. இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலையின்  தாக்கத்தின் போது ஆயிரக்கணக்கானோர் இந்தியாவில் உயிரிழந்தனர். இதனை அடுத்து 24 மணி நேரமும் மின்சார தகனம் மையங்கள் செயல்பட்டு, உயிரிழந்தவர்களின் சடலங்கள் எரியூட்டப்பட்டன.

மேலும் தகனம் செய்வதற்காக சில மயானங்களில் உடல்கள் வரிசையாக கிடத்தப்பட்டிருந்தன. மொத்தமாகவும்  பலரது உடல்கள் எரியூட்டப்பட்டன. இதைப்போல் கங்கை நதியில் கொரோனாவால் உயிரிழந்த பலரது உடல்கள் வீசப்பட்டன.

இவ்வாறு வீசப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை குறித்து நாடாளுமன்றத்தில்  திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் பிஸ்வேஷ்வர்,அதற்கான கணக்கு அரசிடம் இல்லை என்று எழுத்துப்பூர்வமாக கூறியுள்ளார்.

Categories

Tech |