விடிற்குள் நுழைந்து பெண்ணிடம் தங்க நகையை திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வலிஊரை கிராமத்தில் பாலகுரு- மனோன்மணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் வீட்டின் கதவை திறந்து வைத்து விட்டு தூங்கி கொண்டு இருந்துள்ளனர். அப்போது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் மனோன்மணியின் கழுத்தில் இருந்த தாலி சங்கிலியை பறித்து விட்டு தப்பி சென்றுள்ளார்.
இதனை பார்த்து துக்கத்தில் இருந்து எழுந்த மனோன்மணி உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நகையை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.