தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா குறித்த பழைய வீடியோ தற்போது வலைத்தளங்களில் பரவிவருகிறது.
நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா தம்பதியினர் அண்மையில் இருவரும் பிரிவதாக கூறியுள்ளார்கள். இவர்கள் 18 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து தற்போது பிரிவதாக கூறியுள்ளது உறவினர்கள் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதனால், குடும்பத்தில் உள்ளவர்கள் இருவரும் விட்டுக்கொடுத்து சேர்ந்து வாழலாம் எனக் கூறியும் பிரிந்துள்ளனர். தற்போது குடும்பத்தினர்கள் இவர்களை சேர்த்து வைக்கும் எண்ணத்தோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று(பிப்ரவரி 8) ப்ரொபோஸ் டேவை முன்னிட்டு தனுஷிடம் ஐஸ்வர்யா எவ்வாறு ப்ரொபோஸ் செய்தார் என்ற செய்தி வலைதளங்களில் பரவி வருகிறது. சென்ற 2002ஆம் வருடம் இவர்கள் இருவருக்கும் அறிமுகம் ஏற்பட்டது. தனுஷ் நடித்த “காதல் கொண்டேன்” திரைப்படத்தை பார்த்த ஐஸ்வர்யா தனுஷின் நடிப்பு பிடித்திருந்தது. இதனால் ஐஸ்வர்யா தனுஷுக்கு மலர்கொத்து ஒன்றை அனுப்பியிருக்கிறார். பிறகு இவர்கள் இருவருக்கிடையே காதல் மலர்ந்தது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு அடுத்தபடியாக 2004 ஆம் வருடம் இருவீட்டாரின் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். தற்போது தனுஷ் அளித்த பழைய பேட்டியில் நான் ஐஸ்வர்யாவிடம் காதலை சொல்லவில்லை ஐஸ்வர்யாதான் என்னிடம் ப்ரொபோஸ் செய்தார் என்று கூறிய வீடியோ தற்போது வலைதளங்களில் பரவி வருகிறது.