Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நிலப்பிரச்சினையால் விரக்தியடைந்த விவசாயி…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

விவசாயி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கைலாசபுரம் கிராமத்தில் சதுரகிரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தன்னுடைய 1 1\2 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சதுரகிரி நிலத்தை சுற்றியுள்ள சுமார் 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தை ஒரு தனியார் நிறுவனத்தினர் பட்டாசு ஆலை கட்டுவதற்காக வாங்கியுள்ளனர். இதனையடுத்து சதுரகிரி நிலத்தில் ஆலை நிர்வாகத்தினர் சுற்றுச்சுவர் கட்டி வருவதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மாசார்பட்டி காவல் நிலையத்தில் சதுரகிரி தனது நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் காவல்துறையினர் நிலத்தை சர்வேயர் மூலம் அளந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தங்களது நிலத்தை ஆக்கிரமிப்பு செய்திருப்பார்கள் என நினைத்து சதுரகிரி விரக்தியில் தன்னுடைய தோட்டத்திற்கு சென்று அங்கு வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த மாசார்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சதுரகிரியின் உடலை கைப்பற்றி விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |