கிணற்றில் ஒருவர் சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாரிமங்கலம் கிராமத்தில் இருக்கும் விவசாய கிணற்றில் ஒருவர் சடலமாக கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு காவல்துறை மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர் நடத்திய விசாரணையில் சடலமாக கிடந்தவர் வேலூரில் வசிக்கும் அன்புநாதன் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அன்புநாதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.