ரேஷன் அரிசி கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பண்டாரவிளையில் ஏரல் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த மினி லோடு ஆட்டோவை காவல்துறையினர் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் மினி லோடு ஆட்டோவில் 10 மூட்டை ரேஷன் அரிசி இருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஆட்டோவை ஒட்டி வந்த டிரைவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் வசிக்கும் இசக்கிராஜா என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் மினி லோடு ஆட்டோவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.