Categories
கல்வி மாநில செய்திகள்

மெட்ரிக்குலேஷன் பள்ளிகளும் ஜன. 4ஆம் தேதி திறக்கப்படும்.!!

அரையாண்டு விடுமுறைக்குப் பின்னர் அனைத்து மெட்ரிக் மற்றும் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் ஜனவரி 4ஆம் தேதி திறக்கப்படும் என மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான அரையாண்டு விடுமுறை டிசம்பர் 23ஆம் தேதி முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டது. அதன்படி பள்ளிகள் 3ஆம் தேதி திறக்கப்படவிருந்த நிலையில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இதனால் ஜனவரி 4ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், “அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பின்னர் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் திறக்கப்படும் ஜனவரி 4ஆம் தேதி அன்றே, அனைத்து மெட்ரிக் மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளும் திறக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |