Categories
தேசிய செய்திகள்

மக்களே…! இனி கவலையில்லை…. ஏழுமலையானை தரிசிக்க…. இங்கிருந்து ஸ்பெஷல் ரயில்…!!!!

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் சார்ந்த சுற்றறிக்கையை ஐ.ஆர்.சி.டி.சி வெளியிட்டுள்ளது.

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் சார்ந்து சுற்றறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. இந்த சுற்றறிக்கையை ஐ.ஆர்.சி.டி.சி வெளியிட்டுள்ளது. திருப்பதிக்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று கோவையிலிருந்து சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.இந்த ரயிலில் ஏசி வசதி செய்யப்பட்டு சாதாரண இருக்கைக்கு 3,300 ரூபாயும், ஏசி இருக்கைக்கு 4,600 ரூபாய் கட்டணமும் வசூலிக்க படுவதாக கூறப்பட்டுள்ளது.

இந்த கட்டணம் ஏழுமலையானை சிறப்பு தரிசனம் செய்வதற்கும் காலை மற்றும் இரவு சைவ உணவு கட்டணமாகவும், சுற்றுலா வழிகாட்டி காண கட்டணமாகவும், ஏசி உடன் கூடிய தங்கும் விடுதி கட்டணமாகவும், பேருந்து கட்டணமாகவும் எடுத்துக்கொள்ளப்படும். இந்த பயணத்தில் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் தீவிரமாக கடைபிடிக்கப்படும். இந்த சிறப்பு ரயில் கோவை டு திருப்பதி செல்லும் ரயில், கோவை திருப்பூர் ஈரோடு சேலம் ஜோலார்பேட்டை காட்பாடி ஆகிய ரயில் நிலையங்களில் வழியாக செல்லும்.

இது பற்றிய கூடுதல் தகவல் அறிய 8287931965,9003140655 செல்போன் எண்களை தொடர்பு கொண்டு கோவை அலுவலகத்தில் தெரிந்து கொள்ளலாம் மற்றும் http://www.irctctourism.com என்ற இணையதளம் மூலமாகவும் தெரிந்துகொள்ளலாம். ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதிக்கு தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான பக்தர்கள் சென்று தரிசனம் செய்து வருகிறார்கள். இதனால் மக்களின் வசதிக்கேற்ப சிறப்பு பேருந்துகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

ஏழுமலையான் தரிசன இலவச டோக்கன் 300 ரூபாய், சிறப்பு தரிசன டிக்கெட்டுகள், விஐபி தரிசனம் விஜிஐபி தரிசனம் என பல்வேறு விதமாக கொடுக்கப்படுகிறது. இந்த இலவச டோக்கன்கள் மற்றும் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகளைஅனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்திக் கொள்ளலாம். தற்போது கொரோனா பரவல் காரணமாக இந்த டிக்கெட்டுகள் முழுவதும் ஆன்லைனில் மாறிவிட்டது. ஒவ்வொரு மாத இறுதியிலும் திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் அடுத்த மாதத்திற்கான டிக்கெட்டுகள் வெளியிடப்படும்.இந்த டிக்கெட்கள் சில நிமிடங்களில் விற்று தீர்ந்து விடும் என்பதால் முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும்.

Categories

Tech |