வீட்டின் அருகே சாராயம் விற்பனை செய்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள குளத்தூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதே பகுதியில் தனித்தனியாக வீட்டின் அருகாமையில் சாராய விற்பனை செய்த சுரேந்திரன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பின்னர் அவர்களிடம் இருந்த 25 லிட்டர் சாராயத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.