Categories
தேசிய செய்திகள்

“குஷியோ குஷி” பென்ஷன் தொகை உயரபோகுதாம்…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

லட்சக்கணக்கான ஊழியர்களின் பென்ஷன் தொகை விரைவில் உயரப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது .

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில்(EPFO) சேமிக்கும் சக ஊழியர்களின் பென்சன் தொகை விரைவில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதாவது தற்போதைய சூழலில் அடிப்படை சம்பளத்தில் இருந்து பென்ஷன் தொகை கணக்கிடப்படுகிறது.இந்த அடிப்படை சம்பளத்தில் இருந்து கணக்கீடு செய்வதற்கு ஒரு வரம்பு உள்ளது. இந்த வரம்பை உயர்த்துவதற்கு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அதாவது ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூபாய் 18000 என்றால் அதற்கான பென்ஷன் தொகையும் ரூ .18 ஆயிரத்தில் இருந்து மட்டுமே கணக்கிடப்படுகிறது. இதிலும் குறிப்பாக ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ .18 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருந்தாலும் பென்ஷன் தொகையும் அதே தொகையான 18,000 ரூபாய் மட்டுமே கணக்கிடப்படுகிறது.

இதனால் ஊழியர்களுக்கு இழப்பை ஏற்படுத்துகிறது. இந்த அடிப்படை சம்பள வரம்பை உச்சநீதிமன்றம் நீக்கினால் பல மடங்கு பென்ஷன், ஊழியர்களுக்கு கிடைக்கும்.கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி ஊழியர்களுக்கான ஓய்வூதிய திருத்தத்  திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. இதற்கு தனியார்துறை ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் EPFO அமைப்பு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |