வீட்டில் இருந்த மனைவி காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தச்சூர் கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி வீட்டிலிருந்து கடைக்கு சென்று விட்டு திரும்பி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த இவரது மனைவி பிரியா திடீரென காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணமூர்த்தி தனது மனைவியை உறவினர் வீடுகள் மற்றும் பல இடங்களில் தேடி பார்த்துள்ளார்.
ஆனால் எங்கு தேடியும் அவரின் மனைவி பிரியா கிடைக்கவில்லை. இது தொடர்பாக கிருஷ்ணமூர்த்தி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பிரியா என்ன ஆனார், எங்கு சென்றார், கடத்தப்பட்டாரா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.