Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பைக் திருடியதால் சிறுவர் உட்பட மூவர் கைது …!!!கும்பகோணம் அருகே பரபரப்பு …!!!

கும்பகோணம் அருகே இருசக்கர வாகனத்தை திருடி விற்க முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்  .

தஞ்சை மாவட்டம் ஆலமன்குறிச்சியை சேர்த்த கனகராஜ் என்பவர் தனது நண்பருடன் கடந்த 29 ஆம் தேதி காரைக்கால் கடற்கரைக்கு சென்றுள்ளார் .அங்கு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு நடந்து சென்ற அவர் திரும்பி வந்து பார்த்தபோது அதனை காணவில்லை . 1,00,000ரூபாய் மதிப்புள்ள தனது இருசக்கர வாகனம் காணவில்லை என நகர காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார் .

இந்த நிலையில் இரவு நேரத்தில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் ஒரு இருசக்கர வாகனத்தில் 3 பேர் வந்ததை கண்டு அவர்களை காவல் துறையினர் மடக்கி பிடித்தனர் .அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் வந்தது திருட்டு வாகனம் என்றும் ,அதனை விற்பனை செய்வதற்காக கொண்டு சென்றதும் தெரியவந்தது .இதையடுத்து 17 வயது சிறுவன் மற்றும் லோகேஷ் ,கவிமணி ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர் .பின்னர் கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் .

Categories

Tech |