இளம்பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்து விட்டு திருமணத்திற்கு மறுத்த வாலிபருக்கு நீதிமன்றம் 10 வருடம் சிறை தண்டனை விதித்துள்ளது.
கடலூர் மாவட்டத்திலுள்ள கீழ்செருவாய் பகுதியில் பிரதாப் என்பவர் வசித்து வருகிறார். இவர் இன்ஜினியரிங் முடித்து விட்டு வேலையில்லாமல் இருக்கிறார். இந்நிலையில் பிரதாப் தனது பெரியப்பா வீட்டுக்கு சென்று வந்த போது அதே பகுதியில் வசிக்கும் 26 வயதுடைய இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியது. இதனையடுத்து பிரதாப் அந்தப் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.
இதனால் கர்ப்பமான இளம்பெண்ணை பிரதாப் அழைத்து சென்று கருக்கலைப்பு மாத்திரை வாங்கிக் கொடுத்து கருக்கலைப்பு செய்துள்ளார். தற்போது இளம்பெண் பிரதாபிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஆனால் அதற்கு பிரதாப் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதில் கோபம் அடைந்த இளம்பெண் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி பாலகிருஷ்ணன் பிரதாப்புக்கு 10 வருடம் சிறை தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார்.