இருவேறு சாதிகளைச் சார்ந்த பெற்றோர்கள் திருமணம் செய்து கொள்ளும் பொழுது அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கான ஜாதி சான்றிதழ் வழங்குவது தொடர்பாக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இரண்டு வெவ்வேறு ஜாதிகளைச் சேர்ந்த பெற்றோர்கள் திருமணம் செய்து கொள்ளும் போது அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஜாதி சான்றிதழ் தந்தை தாயின் விருப்பத்தின்படி தந்தையின் ஜாதி அல்லது தாயின் ஜாதியைச் சேர்ந்தவர்களாக கருதப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜாதி சான்றிதழ் வழங்கும் அதிகாரிகளுக்கு தகுந்த அறிவுரை வழங்க வருவாய் நிர்வாக ஆணையர் கேட்டுக் கொள்ளப்படுகிறார். என அரசு அறிவித்துள்ளது.
Categories