நேற்று இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியில் ரிஷப் பந்த், விராட் கோலி, ரோஹித் சர்மா என அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவின் சிறப்பான ஆட்டத்தினால் இந்திய அணியின் ஸ்கோர் கணக்கு உயர்ந்தது.
இதனால் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 237 ரன்களை குவித்தது. அதில் சூர்யகுமார் அதிகபட்சமாக 64 ரன்களை சேர்த்தார். இதையடுத்து பிரசித் கிருஷ்ணா வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தரமாக பந்துவீசி பேட்ஸ்மேன்களை வீழ்த்தி அசத்தினார். அதாவது அவர் 4 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.
அதன்பிறகு ஜோடி சேர்ந்த அகீல் ஹொசைன்-ஷமரா புரூக்ஸ் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் ஸ்கோரை மெல்ல மெல்ல உயர்த்தினர். பிறகு இருவரும் அரைசதம் கடப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அகீல் ஹொசைன் 34 ரன்னிலும், ஷமரா புரூக்ஸ் 44 ரன்னிலும் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 46 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 193 ரன்களை மட்டுமே எடுத்தது. அதில் இந்திய அணியில் பிரசித் கிருஷ்ணா 12 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸை 44 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னேறியது.