Categories
அரசியல்

வேண்டாத கிரகம் நம்மை விட்டு ஒழிஞ்சிட்டு…. இனி நமக்கு வெற்றி தான்…. ஓ.எஸ்.மணியன் சூசகம்…!!!

தமிழகத்தில் வருகிற 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு அனைத்துக் கட்சியினரும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போதுதான் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அதிமுக மற்றும் திமுகவை பொறுத்தவரை ஒருவரை ஒருவர் மாறி மாறி குறை கூறிக் கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர். அந்த வரிசையில் ஸ்ரீரங்கத்தில் போட்டியிடவுள்ள அதிமுக வேட்பாளரை முன்னாள் அமைச்சர் ஓ.எஸ் மணியன் அறிமுகம் செய்து வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. பொங்கல் பரிசு தொகுப்பு என்ற பெயரில் மாபெரும் ஊழல் செய்த திமுகவிற்கு இந்த தேர்தல் தக்க பதிலடியாக இருக்க வேண்டும். ஜாதகம் பார்க்கும் போது சனி கேது போன்ற கிரகங்கள் இருப்பதாக கூறுவார்கள். தற்போது அந்த வேண்டாத கிரகங்கள்( பாஜக மற்றும் பாமக) எல்லாம் நம்மை விட்டு பிரிந்து நல்ல சகுனத்தில் நாம் தேர்தலை சந்திக்க உள்ளோம் எனவே இனிமேல் நமக்கு வெற்றிதான் என அவர் கூறினார்.

Categories

Tech |