தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெறும் போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது கூட்டுறவு துறையில் உள்ள உதவி இயக்குனர் கூட்டுறவு தணிக்கை உள்ளிட்ட காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 8 காலி பணியிடங்கள் உள்ளது. இப்பணிக்கு நியமனம் செய்யப்படுபவர்களுக்கு ரூ.56,100-1,77,500 மாத சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு – 1.07.2022 அன்று 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி – எம்.காம் மற்றும் கூட்டுறவு டிப்ளோமா, ( அல்லது ) எம்.ஏ ( கூட்டுறவு ), அல்லது ஐசிஏஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு – நேர்முகத் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புபவர்கள் http://www.tnpscexams.in அல்லது http://www.tnpsc.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பித்து கொள்ளலாம்.
மேலும் ஏற்கனவே நிரந்தரப் பதிவு வைத்திருப்பவர்கள் அதன் மூலமும் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதேபோல் ரூ.150 கட்டணம் செலுத்தி இந்த பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் எந்த விதமான கட்டணமும் செலுத்த தேவையில்லை.
அதேபோல் விதவைகள் மற்றும் SC, SC(A), ST, MBC(V), MBC – DNC, MBC, BC, BCM உள்ளிட்ட பிரிவுகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு எழுத்து தேர்வு தாள்-I 30.04.2022 அன்றும், தாள்-II அன்று ( 30.04.2022 ) மதியமும் நடைபெறும். இந்த தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 21.02.2022 ஆகும்.