Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடை ஊழியர்களே!…. இனி இந்த தவறை பண்ணாதீங்க…. அரசு எச்சரிக்கை….!!!!

தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு பருப்பு, அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே கடந்த சில நாட்களாக ரேஷன் பொருள்கள் தொடர்பாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது.

இந்த நிலையில் மாவட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு, உணவு வழங்கல் துறை ஆணையர் ராஜாராமன் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “ரேஷன் கடைகளில் வினியோகம் செய்யப்படும் அத்தியாவசியப் பொருள்கள் சரியான தரம், எடை, அளவுடன் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

இந்த பணியில் தாமதமாக செயல்படும் அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு விதிகளின்படி எடுக்கப்படும். அதேபோல் மாவட்ட வழங்கல் மற்றும் துணை ஆணையர்கள் தவறு செய்யும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறதா ? என்பதை கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |