Categories
சினிமா தமிழ் சினிமா

“தலைவர் 170″… தனுஷுக்கு கிடைக்குமா வாய்ப்பு…. ரஜினியின் முடிவு என்ன…!!

ஐஸ்வர்யா விவாகரத்தால் கடும் கோபத்திலிருக்கும் ரஜினியின் கடைசி படத்தை இயக்குவதற்கு தனுஷுக்கு வாய்ப்பு கொடுப்பாரா என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்துள்ளது.

தனுஷ் ஐஸ்வர்யா கடந்த 18 வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்துள்ளார்கள். ஆனால் இருவரும் கடந்த ஜனவரி மாதம் பிரிய போவதாக இணையத்தில் பதிவிட்டுள்ளார்கள். இவர்களது இந்த பதிவால் நடிகர் ரஜினிகாந்த் கவலையின் உச்சத்துக்கே சென்றுள்ளார். இதற்கிடையே ரஜினியின் கடைசி படமான தலைவர் 170 ஐ தனுஷ் தான் இயக்குவார் என்ற பேச்சு எழுந்துள்ளது.

இந்நிலையில் தனது மகளுடனான விவாகரத்தால் அந்த படத்தை இயக்க நடிகர் ரஜினி தனுசுக்கு வாய்ப்பு கொடுக்க துளியளவு கூட சான்ஸ் இல்லை அனைவராலும் பேசப்பட்டு வருகிறது. இருப்பினும் படம் வேறு பர்சனல் வேறு என்று நடிகர் ரஜினி தனது மகளின் ஐஸ்வர்யாவுடனான விவாகரத்தை மனதில் வைத்துக் கொள்ளாமல் தனுஷுக்கு வாய்ப்பு கொடுப்பாரா என்ற சந்தேகம் அனைவரிடத்திலும் எழுந்துள்ளது.

Categories

Tech |