தமிழ் சினிமாவில் கின்னஸ் ரெக்கார்டில் நடிகர், நடிகை, இசையமைப்பாளர், பாடகர் என பலர் இடம் பிடித்துள்ளனர். கின்னஸ் சாதனை படைத்த 5 பிரபலங்கள் யார் என்று பார்க்கலாம்
எஸ் பி பாலசுப்ரமணியன்: இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகரும், இசையமைப்பாளரும், நடிகரும், தயாரிப்பாளரும் ஆவார். இவர் தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி மற்றும் மலையாளத் திரைப்படங்களில் அதிகமாகப் பணியாற்றியுள்ளார். 1966 முதல் திரைப்படங்களில் பாடத் தொடங்கி, 40,000கும் அதிகமான பாடல்களை 16 இந்திய மொழிகளில் பாடியுள்ளார். உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான பாடல்களைப் பாடியதற்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ (2001), பத்ம பூசண் (2011) விருதுகளையும் வழங்கிச் சிறப்பித்தது. நவம்பர் 2021இல் இவருக்கு பத்ம விபூசண் விருது இவரின் மறைவிற்குப் பின்பு இந்திய அரசால் வழங்கப்பட்டது.
நடிகை மனோரமா: தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் தனது திறனை வெளிப்படுத்திய இவர் 1500 திரைப்படங்களுக்கு மேல் நடித்தார். இவர் தமிழ்த் திரையுலகினராலும், தமிழ்த் திரைப்பட ரசிகர்களாலும் ‘ஆச்சி’ என அன்போடு அழைக்கப்பட்டார். இதனால் அவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
ஜெயலலிதா: முன்னாள் தமிழக முதல்வரும், அரசியல் தலைவரும், பிரபல முன்னாள் தென்னிந்தியத் திரைப்பட நடிகையும் ஆவார். ஜெயலலிதா, 5 டிசம்பர் 2016 ஆண்டு சென்னையிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் காலமானார். ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனான சுதாகரனின் திருமணம் 1995 ஆண்டு செப்டம்பர் மாதம் மிகவும் ஆடம்பரமாக சென்னையில் நடைபெற்றது. அந்த திருமணம் வரவேற்பு ஏறத்தாழ 75 கோடி ரூபாய் செலவில், தமிழ்நாட்டு மக்கள் முகம் சுழிக்கும் வகையில் நடந்தேறியது. அதனால் இந்த திருமணம் உலக சாதனை படைத்தது கின்னஸில் இடம்பிடித்துள்ளது.
உலக நாயகன் கமலஹாசன்: ஒரு புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் சில திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். கமல ஹாசனின் வாழ்க்கை வரலாற்றை ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் எழுதியிருந்தார்.இப்புத்தகத்தின் தலைப்பு 1458 எழுத்துக்கள் மற்றும் 330 சொற்களைக் கொண்டிருந்தது. இதற்கு முன்பு 2007ல் இத்தாலியரின் புத்தகத்தின் சாதனையை முறியடித்து கமலஹாசனின் வரலாறு புத்தகம் சாதனை படைத்தது கினைஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
ஏ ஆர் ரகுமான்: புகழ் பெற்ற இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இந்தி, தமிழ், ஆங்கிலம் போன்ற பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் இசைப்புயல் என அழைக்கப்படுகிறார். இவர் 6 தேசிய விருதுகள், 32 பிலிம்பேர் விருதுகள், 11 IIFA விருதுகள், 2 ஆஸ்கர் விருதுகள், பாப்தா, கிராமி விருதுகள் என சர்வதேச அளவில் இசைக்காக வழங்கப்படும் எண்ணற்ற விருதுகளையும் பெற்றுள்ளார். இவர் “மா துஜே சலாம்” என்ற பாடலை 265 மொழிகளில் பாடிய இசையமைப்பாளராக சாதனை படைத்தது கின்னஸில் இடம்பெற்றுள்ளார்.