தலையில் கல்லை தூக்கி போட்டு வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தலையில் ரத்த காயங்களுடன் வாலிபர் ஒருவர் மயங்கி கிடப்பதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த வாலிபரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி வாலிபர் பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபர் சக்தி என்பது தெரியவந்துள்ளது.
இவர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் நண்பர்களுடன் அமர்ந்து சக்தி மது குடித்துள்ளார். இதனையடுத்து நண்பர்களுக்கிடையே தகராறு ஏற்பட்ட போது கோபமடைந்த நண்பர்கள் சக்தியின் தலையில் கல்லை போட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்றது தெரியவந்துள்ளது. எனவே சக்தியை கொலை செய்த நண்பர்களின் விவரம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.