மத்திய அரசானது வெளிநாடுகளிலிருந்து ட்ரோன் இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளது .
புதுடெல்லியில் மத்திய அரசு வெளிநாடுகளிலிருந்து ட்ரோன் இறக்குமதிக்கு தடை போடப்பட்டிருந்தது. இந்நிலையில் மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டிருந்த அறிக்கையில். ராணுவ பயன்பாட்டிற்காக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்கு விதி விலக்கு அளிக்கப்பட்டதாக குறிப்பிட்டிருந்தது.
மேலும் ட்ரோன்களுக்கான உதிரி பகுதிகளை இறக்குமதி செய்வதற்கு அனுமதி எதுவும் தேவையில்லை என்று தெரிவித்திருந்தது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய பாதுகாப்புத் துறை உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறியுள்ளது.