தனுசு ராசி அன்பர்களே…!! இன்று மனதில் இனம்புரியாத சஞ்சலம் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். முக்கியத் தேவைக்கு எதிர்பார்த்த பணம் ஓரளவு கிடைக்கும். அதிக விலையுள்ள பொருட்களை தயவுசெய்து இரவல் கொடுக்க வேண்டாம். இன்று காரிய அனுகூலம் இருக்கும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும்.
தனியார் வேலையில் இருப்பவர்களுக்கு சிறு வாக்குவாதங்கள் வரக்கூடும். வரவுக்கு ஏற்ற செலவுகளும் வந்து சேரும். எனினும் வருங்காலத்திற்கு தேவையான முதலீடுகளை அதற்கு உண்டான நபரிடம் ஆலோசனைகள் செய்து முதலீடு செய்வது ரொம்ப நல்லது. இன்றைய நாள் ஒரளவு மகிழ்ச்சியான நாளாக இருக்கும். குடும்பத்தில் எந்த பிரச்னையும் இல்லை கணவன் மனைவிக்கு இடையே எந்த பிரச்சினை இல்லை, அன்பு நீடிக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெளிர் நீலநிறம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்த நிறமாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமுமே நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம் மற்றும் மஞ்சள் நிறம்