Categories
தேசிய செய்திகள்

கடந்த ஆண்டில் மட்டும்…. இத்தனை பேருக்கு குடியுரிமையா…? வெளியான தகவல்..!!

கடந்த ஆண்டு 2021ல் மட்டும் 1,773 வெளிநாட்டவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த்  ராயிடம் கடந்த ஐந்து ஆண்டுகளில் மத்திய அரசால் இந்திய குடியுரிமை வழங்கப்பட்ட மொத்த வெளிநாட்டு எண்ணிக்கை குறித்தும் ,அதை எடுத்துக் கொள்வதற்கான காரணங்களின் விளக்கம் குறித்தும்  மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதில் அவர் குடியுரிமை சட்டம் 1955 கீழ் கடந்த 5 ஆண்டுகளில் 4,844 வெளிநாட்டவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் தகுதியான வெளிநாட்டினருக்கு குடியுரிமை பிரிவு 5 இன்  கீழ் பதிவு செய்வதன் மூலம், பிரிவு 6 இன்  கீழ் நிலைப்படுத்துதல் அல்லது குடியுரிமை சட்டம், 1955 இல் பிரிவு 7 இன்  கீழ் பிரதேசத்தை இணைப்பதன் மூலம் வழங்கப்படுகிறது. என எழுத்துப்பூர்வமாக மக்களவையில் (நேற்று) பதிலளித்துள்ளார்.

மேலும் 2021ல் 1,773 வெளிநாட்டவர்களுக்கும்,2020 ல்639 பேருக்கும்,2019 ல்  987 பேருக்கும் , 2018 ல்  628 பேருக்கும் , 2017 ல்  817 பேருக்கும்  இந்திய குடியுரிமை சட்டம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |