பாவனி ரெட்டி பழைய வீடியோ ஒன்றில் விஜய் பற்றி கூறியுள்ளார்.
தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ”பீஸ்ட்” . இதனையடுத்து, தளபதி விஜய்க்கு மற்ற நடிகர்கள் கூட ரசிகர்களாக உள்ளனர் என்பது அனைவரும் அறிந்த விஷயம்.
இந்நிலையில், பிக்பாஸ் பிரபலம் விஜய்யை பற்றி கூறியுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி பாவனி ரெட்டி, விஜய் பற்றி கூறியுள்ளார். அதில், ”நான் விஜய்யை அதிகம் சைட் அடிப்பேன் என கூறியுள்ளார். மேலும், எனக்கு நிறைய பேர் மீது கிரஷ் இருந்திருக்கிறது. ஆனால் விஜய் வேற லெவல். அவரது ஸ்டைல் மற்றும் எல்லாமே எனக்கு நிறைய பிடிக்கும்” என கூறியுள்ளார்.