Categories
தேசிய செய்திகள்

மாணவர்களே ரெடியா….? ஏப்-16 முதல் மே-6 வரை…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

கர்நாடக மாநிலத்தில் பி.யூ.சி இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு நடத்த கல்வித்துறை அறிவித்துள்ளது. 

கர்நாடக மாநிலத்தில் கொரோனா நோய் தொற்றின் மூன்றாவது அலை தீவிரமாக பரவி வந்தது. இதனால் கர்நாடகாவில் பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டதால் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியது. கொரோனாவின் பாதிப்பு குறைந்ததால் பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல திறக்கப்பட்டு செயல்படுகின்றன. இதனால் பி.யூ.சி இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு நடக்குமா என்ற சந்தேகம் எழுந்து வந்தது. இதுபற்றி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ்  பொதுத் தேர்வை நடத்துவது குறித்து கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதுகுறித்து  கர்நாடகா பள்ளிக்கல்வித்துறை கொரோனா தோற்று பரவல் குறைந்து வருவதால்  மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பி.யூ.சி இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.இதனால் பி.யூ.சி இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு வருகின்ற ஏப்ரல் மாதம் 16-ஆம் தேதி தொடங்கி மே மாதம் 6-ஆம் தேதி வரை நடக்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்து தேர்வு கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் ஒரு மணிவரை நடக்க உள்ளது. மாணவ மாணவிகள் கேள்வித்தாளை படித்துப் பார்க்க 15 நிமிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வு காலை 10.15 மணிக்கு முதல் தொடங்கும்.

Categories

Tech |