Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“நான் விளையாட்டாக செய்தேன்” பாலியல் தொந்தரவு அளித்த மாமனார்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

மருமகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த மாமனாரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் கடை வைத்து செருப்பு தைத்து வருகிறார். இவரது மகனுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் கடந்தும் குழந்தை பிறக்கவில்லை. இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த மருமகளுக்கு சேகர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் தனது கணவரிடம் தெரிவித்துள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சேகரின் மகன் தனது தந்தையிடம் இது குறித்து விசாரித்துள்ளார். அப்போது நான் விளையாட்டாக செய்தேன் என்று சேகர் பதில் அளித்துள்ளார். இதனால் கோபமடைந்த சேகரின் மகன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சேகரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |