அண்ணன் இறந்த துக்கத்தில் தங்கையும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழி பகுதியில் பரதேசி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெடுஞ்சாலைத்துறையில் ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவரது 2 தங்கைகள் இளைய தங்கை சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக பரதேசி திடீரென இறந்துவிட்டார்.
இதனை கேள்விப்பட்ட பரதேசியின் மூத்த தங்கை மீனாட்சி கதறி அழுதுள்ளார். ஒரு வாரம் கழித்து அண்ணனின் நினைவு சடங்குகள் நடைபெற இருந்த நிலையில் மீனாட்சியும் உடல் நிலை மோசமாகி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இவ்வாறு அண்ணன் இறந்த துக்கம் தாங்காமல் தங்கையும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.